திண்டுக்கல்லில் திமுக பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி குழு அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜப்பா, துணை செயலாளர் இளமதி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நேரு பாண்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாநகர பொருளாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜூலுல்ஹக், ஜானகிராமன், சந்திரசேகரன்
உள்ளிட்ட திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, மாணவரணி, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வெ.முருகேசன் திண்டுக்கல் செய்தியாளர் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment