ஏப்ரல்-2 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஸ்ரீமதி கார்த்திகேயணி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை திண்டுக்கல் மாவட்ட அரசு வழக்கறிஞர் மனோகரன் வழங்கினார். இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் ஆட்டிசம் தின குறியீடான நீல நிறத்தில் உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் ஆட்டிசம் குறைபாடு பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைத்தனர். இவ்விழாவின் நிறைவாக பள்ளி மேலாளர் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் விஜய் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வெ.முருகேசன் திண்டுக்கல் செய்தியாளர் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment