ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஒப்படைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ஒருவரிடம் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்ய சொல்லியுள்ளார். இதை நம்பி ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் முறைகேடு செய்து தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதை அறிந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இவ்வழக்கு பதிவு செய்து ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரியவரிடம் பணத்தை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment