கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையில் இணைக்கக்கூடாது-
பிரமலைக்கள்ளர் உறவின்முறை பேரவையினர் கலெக்டரிடம் மனு.
திண்டுக்கல், தேனி மதுரை மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்றுவதற்கு பிரமலைக்கள்ளர் உறவின்முறைப் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 20.3.2013 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, அறநிலைத்துறை ஆகிய இதர வகை பள்ளிகள் அனைத்தையும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும்.
மேலும் டி.என்.டி.டி.என்.சி இரட்டை சான்றிதழ் முறையை ஒழிக்க வேண்டும். 1979க்கு முன்பு போலவே ஒரே டி.என்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில்
நிர்வாக குழு தலைவர் செல்வராஜ்,
செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் மாரியப்பன், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment