திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் போட்டிகள் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. 4ஆம் டிவிசன் போட்டியில் பிலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும், எஸ்.எம்.பி.எம் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து முதல் டிவிசன் போட்டியில் கார்னேசன் அணிக்கும், சன் ஸ்போர்ட்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் காரனேசன் அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் டிவிசன் போட்டியில் பார்வதி அணிக்கும், புனித ஜோசப் பாலி அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 8.0 என்ற கோல் கணக்கில் பார்வதி அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது டிவிஷன் போட்டியில் புனித மைக்கேல் அணிக்கும், கீதா டிம்பர் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 9.0 என்ற கோள் கணக்கில் புனித மைக்கேல் அணி வெற்றி பெற்றது என மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment