உருக்கமாக கடிதம் எழுதி வைத்து இளம்பெண் தற்கொலை
திண்டுக்கல் அடுத்த ஜம்புலியம்பட்டி சேர்ந்தவர் பிரசாந்த் என்ற சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தாமரைப்பாடி சேர்ந்த பாக்கியலட்சுமி (32), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டில் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment