திண்டுக்கல்லில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு.
திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கான தேர்வு திண்டுக்கல்
ஆர்.கே.ஜி ரோட்டரி மஹாலில் நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது முதல் 70 வயது வரை உள்ள 69 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியினை மாவட்ட சதுரங்க சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் துவங்கி வைத்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நான்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர்கள் வரும் ஏப்ரல்-28 முதல் மே-2 வரை சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். இதில் சதுரங்க கழக செயலாளர் அப்துல் நாசர், துணைத் தலைவர் ராமலிங்கம்,
மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் ராஜகோபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வெ.முருகேசன் திண்டுக்கல் செய்தியாளர் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment