திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற 36 மணிநேர ஹேக்கத்தான் பயிற்சியில் மதுரை தியாகராஜர் கல்லூரி முதலிடம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 April 2023

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற 36 மணிநேர ஹேக்கத்தான் பயிற்சியில் மதுரை தியாகராஜர் கல்லூரி முதலிடம்.

 


திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற 36 மணிநேர  ஹேக்கத்தான் பயிற்சியில் மதுரை தியாகராஜர் கல்லூரி முதலிடம்.


திண்டுக்கல் பிஎஸ்என்ஏ  கல்லூரியில் ஸ்டார்ட் அப் டிஎன் உடன் இணைந்து

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மற்றும் கூகுள் டெவலப்பர்ஸ் குரூப் மதுரை ஆகியவற்றின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான 36 மணிநேர ஹேக்கத்தான் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்டார்ட் அப் என்பது தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் புதுமைகளை வளர்ப்பதுக்கான தமிழ்நாடு அரசின் நோடல் ஏஜென்சி ஆகும். 

ஸ்டார்ட்அப் டிஎன்-ன்  தொலைநோக்குப் பார்வையானது, தமிழ்நாட்டை மேல் நோக்கிய ஸ்டார்ட் அப்களுக்கான உலகளாவிய இலக்குகளுக்காக மேம்படுத்துவதாகும். தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு, நல்ல ஆரோக்கியம், பசியின்மை, தண்ணீர் சார்ந்த வாழ்க்கை, தரமான கல்வி மற்றும் காலநிலை நடவடிக்கைகள் போன்ற எஸ்டிஜி தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக மொத்த மூத்த 150 அணிகள் பதிவு செய்யப்பட்டன. அதிலிருந்து 33 ஆர்வமுள்ள அணிகள் தேர் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஹேக்கத்தான் நிகழ்ச்சியில்  மதுரை தியாகராசர் கல்லூரி முதலிடம் பிடித்து 40 ஆயிரமும், கரூர் எம்.குமாரசாமி கல்லூரி இரண்டாம் பிடித்து 25 ஆயிரமும், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி மூன்றாமிடம் பிடித்து 15 ஆயிரமும், காரியாபட்டி சேது இன்ஸ்டிட்யூட் நான்காவது இடத்தைப் பிடித்து 12 ஆயிரமும், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி ஐந்தாவது இடத்தை பிடித்த 8 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மதுரை தியாகராஜர் கல்லூரி டிபிஐ நிர்வாக அதிகாரி செபின் சன்னி, மேக்ஸலரேட்டர் அறக்கட்டளை திட்ட இயக்குனர் இமானுவேல் ராபின், கல்லூரி முதல்வர் வாசுதேவன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad