பங்குனி உத்திரம் திண்டுக்கல் முருகன் கோவிலில் பால் குடம் எடுத்து வழிபாடு
தமிழ் கடவுள் முருகனுக்கு பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரம் மிகவும் விஷேச தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். இந்த சிறப்பு வாய்ந்த தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று திண்டுக்கல் ஓய் எம் ஆர் பட்டி முருகன் கோவிலில் பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளில் சென்று கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகன் வீட்டிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல் திண்டுக்கல் நகரில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில், கோவிந்தாபுரம் முருகன் கோவில், சத்திரம் தெரு, செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment