திருமணமான ஒரு வாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
திண்டுக்கல் அடுத்த கதிரணம்பட்டியைச் சேர்ந்தவர் மருதராஜ். ரெட்டியார் சத்திரத்தில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் கடந்த ஒரு வாரம் முன்பு, எரியோடு அருகே உள்ள செண்டுவழி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தர்ஷினி (20) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று காலை கதிரணம்பட்டியில் உள்ள வீட்டில் தர்ஷினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து இவரை மீட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தர்ஷினி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருமணமான ஒரு வாரத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment