திண்டுக்கல் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ஆரம்ப விழா நடைபெற்றது.
திண்டுக்கல் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ஆரம்ப விழா கோட்டை மாரியம்மன் கோயில் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் செல்ல முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். இயல் இசை நாடக மன்ற தலைவர் மற்றும் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு டி.டி.சங்கரதாஸ் சுவாமிகள் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். தமிழ்நாடு இசை, நாடகக் கலைஞர்களின் மாநில பேரவையின் மாநில தலைவர் பாலசுப்பிரமணி வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment