தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. அமைச்சர் மா சுப்பிரமணியன் திண்டுக்கல்லில் பேட்டி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்தி ராஜன், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment