பார்ப்புகழ் போற்றும் பழனியில் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி.
பழனி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி. இங்கு நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி உத்திரத் திருவிழா. மூன்றாம் படைவீடானமான திருஆவினன்குடி கோயிலில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளத் திருவீதி உலா நடைபெற்று வந்தது. மாலையில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி உள்ளிட்ட நேர்த்தி கடன்களைச் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வெள்ளி ரதத்தில் கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.
ஏப்ரல் -4ம் தேதி இன்று அதிகாலை தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றன இதையடுத்து திருஆவினன்குடிக்கு தந்த பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். இன்று மாலை 4.45 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பழநிக்கு வருகை தந்தனர் காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கிரிவல வீதிகளில் உற்சாகமாக அரோகரா கோஷத்துடன் ஆட்டம் பாட்டமாக சென்று முருகனை வழிபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment