தூய்மை பாரத இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் 50 டிராக்டர்களை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்
நகர்ப்புறத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய கிராம ஊராட்சிகளில் தினசரி சேரும் குப்பைகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பைகளை அகற்றுவதில் உள்ள சிரமங்களை கவனத்தில் கொண்டு ஊராட்சிகளில் குவியம் குப்பைகளை உடனுக்குடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தூய்மையான கிராமங்களை உருவாக்கும் வகையில், முதல் கட்டமாக 50 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)பகுதி-2 மற்றும் 15வது நிதி குழு மானிய சுகாதார வரையறுக்கப்பட்ட நிதியிலிருந்து 50 டிராக்டர்கள் மற்றும் குப்பைகளை சுமந்து செல்லும் டிரைலர்கள் ரூபாய். 43.600 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 30 கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு டிராக்டர்கள் வழங்கினார். இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி,
மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், திட்ட இயக்குனர் திலகவதி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் ராஜா, சிவகுரு சாமி,
மகேஸ்வரி,
சுவேதா ராணி, திமுக திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment