பெண்ணை கழுத்தறுத்து கொன்ற முதியவர் கைது.
திண்டுக்கல் கோபால்பட்டி அருகே ஓடும் பஸ்ஸில் தமயந்தி என்பவர் சொத்து தகராறு காரணமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்
இந்நிலையில் இதையடுத்து குற்றவாளி ராஜாங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment