அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் தார் சாலைபணி அமைச்சர் பெரியசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் உலகம்பட்டி முதல் அச்சம்பட்டி வரை ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அடிக்கல் நாட்டு விழா, தாடிகொம்பு பூஞ்சோலை முதல் பள்ளப்பட்டி பிரிவு வரை ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆத்துப்பட்டியில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கட்டிடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், துணை பதிவாளர் அன்புகரசன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ரமேஷ்பாபு, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், திண்டுக்கல் சிறுமலை வன உரிமைக்குழுத் தலைவர் நெடுஞ்செழியன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இசக்கி, உதவி பொறியாளர் குமரன், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னச்சாமி, தாடிக்கொம்பு செயல் அலுவலர் சந்தனம்மாள் மற்றும் பேரரூராட்சி துணைத்தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment