இந்திய மருத்துவ சங்கம் திண்டுக்கல் கிளை சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி துவங்கி வைத்தார்.
அவருடன் இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் கிளை தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, பொருளாளர் டீன் வெஸ்லின், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் கல்லூரி செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணி மாநகர் முக்கிய வீதிகளில் உலக சுகாதார தினத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் மற்றும் பேனர்கள் ஏந்தி வந்தனர். இப்பேரணி நிறைவு பெற்றதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment