வேடசந்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு சீல்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கஞ்சப்பன்பட்டி பகுதியில் தேங்காய் கொட்டாங்குச்சி களை எரித்து பவுடராக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அரசு அனுமதி பெறாமல் நிறுவனம் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த எரித்த கொட்டாங்குச்சிகளை பொக்லைன் வாகனத்தை கொண்டு அழித்தனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment