ஓடிபி மூலம் வங்கி கணக்கில் இருந்து திருடிய ரூ.1,60,000 பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல், ஆத்தூரை அடுத்த சித்தேரேவைச் சேர்ந்தவர் பிரியா. இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவதாக கூறி ஓடிபி பெற்றுக்கொண்டு மேற்படி பிரியா வங்கி கணக்கில் இருந்து ரூ.1,60,000 பணத்தை மர்ம நபர் திருடி விட்டதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஓடிபி பெற்று நூதன முறையில் மோசடி செய்த 1,60,000 பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரியவரிடம் ஒப்படைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment