நிலக்கோட்டையில் பெரிய பட்டாக்கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது.
நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் பகுதியில் விளாம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த நாகராஜன் (23) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது மிகப்பெரிய அளவிலான பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தார். இது எதற்கு என்று கேட்டதற்கு வீடுகளில் கொள்ளையடிக்க செல்லும் போது யாரேனும் மிரட்டினால் குத்திக் கொலை செய்து விட்டு தப்புவதற்காக வைத்திருந்தேன் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நாகராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment