பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றன - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 3 April 2023

பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றன

 


பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.




பழனியில் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 6-ம் நாளான இன்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றன. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றன..

அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்றன.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 

கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து  வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றன தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் அடிவாரம் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி வெகுமார்சியாக நடைபெற்றன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad