திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 327 கோடி மதிப்பிலான 500 படுக்கை வசதி கொண்ட கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் மருத்துவ கல்லூரி திண்டுக்கல் அடுத்த ஒடுக்கம் பகுதியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையும், மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார். 327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 மாடி கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளி, வெளிநோயாளி பிரிவு, மருத்துவ கல்லூரி மாணவர் தங்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ஐ. பெரியசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் விசாகன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி. செந்தில் குமார், காந்திராஜன், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment