மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 9 April 2023

மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 


மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாஷா  (எ)அப்துல் காதர் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் ஹபிபுல்லா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் ஹாரூன் ரஷீத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வருகின்ற 12ஆம் தேதி தமிழக ஆளுநரை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழக மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை கிடப்பில் போட்டுள்ளார்.

43 உயிர்களை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமல்ல தாமதப்படுத்துகின்ற கோப்புகள் அனைத்தும் நிராகரிக்கபட்டதே அர்த்தம் என்று மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடலில் கூறியுள்ளார். இது ஆணவத்தின் உச்சமாக மனித நேய ஜனநாயக  கட்சி கருதுகிறது. மேலும் கூடங்குளம் போராட்டக்காரர்களை வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றவர்கள் என்று கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுபோன்ற செயல்களை கண்டித்தும் தமிழ்நாட்டு ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளோடு  வருகின்ற 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மனித நேய ஜனநாயக கட்சி பங்கேற்கும். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுகின்ற வகையில் காவிரி ஆற்றில் இருந்து மாயனூர் வழியாக பெரிய ராட்சச குழாய்கள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

25 ஆண்டுகள் கடந்து சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். பாஜக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது. ஏனென்று சொன்னால் இந்தியாவில் மத மோதல்கள் உருவாக்குவதற்கும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு  எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. என்பது மனிதநேய ஜனநாயக கட்சியின் கருத்து என்று தெரிவித்தார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேஷன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad