திண்டுக்கல் தேசிய அளவிலான சைக்கிள் வடிவமைப்பு போட்டியில் 5 மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
திண்டுக்கல் பி எஸ் என் ஏ பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய வாகனப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தென்னகபிரி (SAEINDIA) சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. பி எஸ் என் ஏ பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி முதன்மை இயக்குனர் சேர்மன் ஆர் எஸ் கே ரகுராமன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், SAE செயலாளர் சிவ, புதுப் பொருள் வடிவமைப்பின் ஆலோசகர் செல்வமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் வடிவமைப்பு போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தாங்கள் தயாரித்த சைக்கிள்களை காட்சிப்படுத்தி, இயங்கும் முறை, மனிதர்களுக்கு கிடைக்கும் பலன் குறித்து விவரித்தனர். செயின் இல்லாமல் இயங்கும் சைக்கிள், குறைந்த ஆற்றலில் வேகமாக செல்லும் சைக்கிள், பம்பிங் சிஸ்டம், முன்னும், பின்னும் மிதிக்கும் சைக்கிள் என பல்வேறு முறைகளில் இயங்கும் 50க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இந்த போட்டியில் இடம்பெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், வேகம், மனித உடலுக்கு நன்மை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பல்வேறு முறைகளில் இயங்கக் கூடிய சைக்கிள்கள், தேசிய சைக்கிள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்றன. மாணவர்களின் சைக்கிள் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் அணிக்கு ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment