திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது அலுவலர்கள் போலீசில் புகார்; - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 31 March 2023

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது அலுவலர்கள் போலீசில் புகார்;

 



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது அலுவலர்கள் போலீசில் புகார்



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியம் பணியாற்றி வந்த நிலையில்  நேற்று 31.03.23 பணி ஓய்வு பெற்றார்.  இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த வருடம் நடைபெற்ற பணிகள் குறித்த கணக்குகளை அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் தணிக்கை குழு ஆய்வு செய்து சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை இன்றைக்குள் சரி செய்ய வேண்டுமென அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதில் ஒரு சில கணக்குகள் முடிக்கப்பட்டவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் ஆணையர் விளக்கம் கேட்டார். அதற்குரிய விளக்கத்தை அதிகாரி அளித்த நிலையில் அதில் திருப்தி அடையாத ஆணையர்  அலுவலக பணியாளர்கள் 80பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும்  3 சுகாதார ஆய்வாளர்கள் ஒரு தூய்மை பணியாளர் ஆகியோரை  சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இந்த தகவல் அறிந்த அலுவலர்கள் நேற்று பிற்பகல் ஆணையர் அறைக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டனர். அப்பொழுது அலுவலர்களை பார்த்து தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அலுவலர்கள் ஆணையர் சிவசுப்பிரமணியனை  கண்டித்து மாநகராட்சி நுழைவு வாயில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆணையருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டம் 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதனையடுத்து  மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட  மாநகராட்சி அலுவலர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 6 மணி நேரம் நடந்த போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 


 இந்நிலையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட  சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேல், முருகையா. இளநிலை பொறியாளர் தன்ராஜ் மற்றும் தூய்மை பணியாளர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர் அதில் மாநகராட்சி ஆணையர் தங்களை தரைக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் ஆகையால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளித்தனர். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad