பழனியில் பங்குனி உத்திர திருவிழா: பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலை வாழை
பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீர்த்த காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழநியில் வைத்து பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபடுவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துவர். அதற்காக, பழநிக்கு கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழை பழங்கள் விற்பனைக்காக டன் கணக்கில் வந்துள்ளன. சாலையோரங்களில் தற்காலிக வாழைப் பழக்கடைகள் உருவாகியுள்ளன. இந்தாண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு 100 முதல் 150 டன் மலை வாழை வரத்து இருக்கும். இந்தாண்டு வரத்து குறைவால் 40 டன் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment