திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று (31.3.23) கமிஷனர் பணி ஓய்வு பெறுகிறார். பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த ஆடிட்டிங்கில், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 80 பேர் மீது குற்றச்சாட்டு குறிப்பாணைகள் அளித்தார். மேலும் 2 ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கைக்கும் உத்தரவிட்டார். 15 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்த ஊழியர்கள் மீது காலக்கடு நிர்ணயித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு குறிப்பானை நீக்கம் செய்து தரக்கோரி, ஆணையர் அலுவலகத்தில் ஊழியர்கள் முறையிட்டனர். இதற்கு முறையாக பதில் கூறாமலும், ஊழியர்களை உரிமையிலும் தரக்குறைவாகவும் பேசி அறையை விட்டு கமிஷனர் சிவசுப்பிரமணியன் வெளியேறினார். இதனால் விரக்தி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி கமிஷனர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட குற்ற குறிப்பானைகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் துப்புரவு ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment