திண்டுக்கல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்101ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அதேபோல் தினதோறும் சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் கருட வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
இதனை அடித்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. அலங்கார மகா மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்று விஜயவல்லி, ஜெயவல்லி சமேத வரதராஜப் பெருமான் கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலை புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. ஏப்ரல் 4ம் தேதி தெப்ப உற்சவம், 5ம் தேதி புஷ்ப அங்கி சேவை நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment