திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை ஆடலூர் பகுதியில் சுமார் 3.கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 3 April 2023

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை ஆடலூர் பகுதியில் சுமார் 3.கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பன்றிமலை மற்றும் ஆடலூர் கிராமங்களில்  1027 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலை மற்றும் ஆடலூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் (03.04.2023) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி  முன்னிலை வகித்தார். 


இவ்விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  பங்கேற்று, 1027 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.1 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார். 

இவ்விழாவில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  பேசியதாவது: இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடியே 20 இலட்சம் மதிப்பில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் மருத்துவ சேவை மேம்படும். நாளை திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ சேவை துவக்கப்படவுள்ளது. இருப்பினும் பன்றிமலை போன்ற மலை கிராமப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். ஏழை, எளிய மக்களுக்காக இம்மருத்துவ சேவை சிறப்பாக செயல்படும். மேலும், பன்றிமலை பகுதிக்கென ஒரு ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், மழைவாழ் மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், மின்விளக்கு வசதி மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளும் சிறப்பாக மேம்படுத்தப்படும். மேலும், இப்பகுதி ஆடலூர், பன்றிமலை மற்றும் கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சிறப்பு ஊராட்சியாக இங்கு பல்வேறு மேம்பாட்டு வசதிகள் செய்திட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், குடிநீர் வசதிகள் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.100 நாள் வேலைத்திட்டத்தில் அதிக நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இப்பகுதியில் காட்டுமாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையுடன் கலந்து ஆலோசித்து இப்பிரச்சினையை தீர்க்க நல்ல ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் 


வருவாய்த்துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.23.70 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 32 பயனாளிகளுக்கு பட்டா நகல், 25 பயனாளிகளுக்கு ரூ.2.01 இலட்சம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள், 13 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா, 153 பயனாளிகளுக்கு ரூ.1.53 இலட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.67,500 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகை, சமூகப்பாதுகாப்புத்துறையின் சார்பில் 80 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25.00 இலட்சம் மதிப்பில் சுய உதவிக்குழு கடன், விவசாயத்துறையின் சார்பில் 312 பயனாளிகளுக்கு ரூ.5.50 இலட்சம் மதிப்பில் விவசாயக்கடன், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பில் கல்வி மற்றும் ஓய்வூதியம், வட்டார வளர்ச்சித்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ரூ.11.09 இலட்சம் மதிப்பிலும் ஆட்டுக்கொட்டகை ரூ.1.81 இலட்சம்  மதிப்பிலும், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி ரூ.4.40 இலட்சம் மதிப்பிலும், தையல் இயந்திரம் ரூ.47,880 மதிப்பிலும், மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ.10.11 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 243 பயனாளிகளுக்கு ரூ.18.12 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள் என 1027 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி  மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுயென ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  பேசினார்.

அதனை தொடர்ந்து, ஆடலூர் ஊராட்சிக்குட்பட்ட சாலை வசதிகள் இல்லாத குண்டும் குழியுமான பாதையில் புலையூர் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பூமலை கிராமத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  நேரில் சென்று, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  மேலும், அங்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும் வகையிலும், சாலை வசதிகளும், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகளும் செய்திட உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும், இப்பகுதியில் விடுபட்டுள்ள நபர்களுக்கு பட்டா வழங்கவும், முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கவும் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்பகுதி மக்களிடம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார் 


இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.வரதராஜன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ப.க.சிவகுருசாமி, முக்கிய பிரமுகர் சத்தியமூர்த்தி, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, இணை இயக்குநர் (வேளாண்மை) அனுசுயா, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ரமேஷ்பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad