திண்டுக்கல் அருகே சரக்குவேன் கவிழ்ந்து விபத்து 25 பெண்கள் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது பட்டத்துநாயக்கன்பட்டி கிராமம் இங்கிருந்து பெண்கள் உட்பட 25 பேரை காட்டு வேலைக்காக ராம கவுண்டன்பட்டி கிராமத்திற்கு சரக்கு வேனில் அழைத்துச் சென்றனர். சரக்கு வேனை டிரைவர் அய்யனார் ஓட்டிச் சென்றார். சரக்குவேன் அழகுபட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நிலை தடுமாறி தலைக்கு புற கவிழ்ந்தது இதில் வேனில் பயணம் செய்த பேபி 32, ஈஸ்வரி 46, முத்துப்பாண்டி அம்மாள் 48, செல்வி 33, டிரைவர் அய்யனார் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment