சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 250 ஆசிரியர்கள் பங்கேற்க தீர்மானம்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஈ.எம்.ஐ.எஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். ஒரே நாடு ஒரே கொள்கை என்ற அடிப்படையில் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 250 ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைராஜ் கோரிக்கைகளைப்பற்றி விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment