திண்டுக்கல்லில் ராம நவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளை ராம நவமியாக கொண்டாப்பட்டு வருகிறது. பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர். அதன் படி திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ராமச்சந்திர மூர்த்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் ராமநவமி முன்னிட்டு பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment