திண்டுக்கல்லில் மருத்துவ குணம் கொண்ட வாட்டர் ஆப்பிள் விற்பனை அமோகம் ¼ கிலோ ரூ.60க்கு விற்பனை
மருத்துவ குணமாகும், தண்ணீர் சத்து அதிகம் நிறைந்தது வாட்டர் ஆப்பிள். ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது இந்த வாட்டர் ஆப்பிள். ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த வாட்டர் ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த, இந்த வாட்டர் ஆப்பிளில் பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் நமது உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. இந்த வகை ஆப்பிளில் வைட்டமின் 'ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பிரசவத்துக்கு பின்பு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு, உடல்வலி, சோர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் ஆகியவற்றுக்கும் இந்த வாட்டர் ஆப்பிள்' சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
குற்றாலம் பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாலுகா பெரும்பாறையை அடுத்த தடியன்குடிசை பகுதிகளிலும், சாகுபடியாகிறது. வருடத்தில் மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்கள் மட்டுமே சீசன் இருக்கும். தற்போது சீசன்’ தொடங்கியது அடுத்து திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகளில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் சாலையோரங்களில் விற்பனை தற்போது அமோகமாக நடந்து வருகிறது. கால் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாட்டர் ஆப்பிளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும், உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். எங்களுக்கும் போதுமான வருமானம் கிடைக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment