திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரி பஸ் - ஜீப் மோதி விபத்து பெண் பஸ் டிரைவர், 5 வயது சிறுவன் உட்பட பேர் காயம். அதிர்ஷ்டவசமாக 30 மாணவிகள் உயிர் தப்பினர்.
திண்டுக்கல் திருச்சி சாலை TN பாறைப்பட்டியில் ஆண்டனி கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகளை பேருந்து மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி இன்று பேருந்து பெண் ஓட்டுனர் அம்பிகா (37) 30 மாணவிகளுடன் திண்டுக்கல்லில் இருந்து கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை TN பாறைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஜீப்பும் மோதிக்கொண்டது. இதில் பெண் ஓட்டுனர் அம்பிகா (37), மாணவி ஸ்வேதா (18) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜீப்பில் பயணம் செய்த வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பெருமாள் (70), மருமகள் லாவண்யா (27), 5 வயது பேரன் உட்பட 5 பேர் காயம் படுகாயம் அடைந்தனர் இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 30 மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment