திண்டுக்கல் அருகே சாலை விபத்து மனைவி கண்முன்னே கணவன் கோரச் சாவு மனைவி, மகள் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் தமில்லேந்திரன் சர்க்கார் (34). அரசு கேபிள் பிரிவு உதவி தொழில் நுட்ப கலைஞர். இவரது மனைவி அஜித்தா (28). ஆசிரியை. இவர்களது மகள் ஜியா(5). இன்று காலை அம்மை நாயக்கனூரில் உள்ள பள்ளியில் தனது மனைவியை விடுவதற்காக டூவீலரில் மகளுடன் மூவரும் சென்றார். கொடைரோடு அருகே உள்ள பொட்டி செட்டிபட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி இடித்து இழுத்துச் சென்றது. மனைவியும் மகளும் கீழே விழுந்த நிலையில் டயரில் அடியில் சிக்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தமிழேந்திரன் சர்க்கார் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே கோரமாக பலியானார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஜித்தா, ஜியா ஆகியோர் அம்மைநாயக்கனூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் உடல் சிதைந்து ஓரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment