திண்டுக்கல்லில் தீப்பந்தம் ஏந்தி மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விக்கப்பட்டவை அடுத்து எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி திண்டுக்கல் காமராஜர் சிலை முன்பு, ராகுல் காந்தியின் எம் பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, மகளிர் காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவி ரோஜா பேகம் தலைமையில், கவுன்சிலர் பாரதி, கிழக்கு மாவட்ட தலைவர் நாகலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில். இதில் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், 21 வது வார்டு மாமன்ற கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment