ராகுல் காந்தியின் பதவி பறிப்பு: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கருப்பு உடை அணிந்து கோசமிட்டு வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களால் திடீர் பரபரப்பு திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் இன்று காலை தொடங்கியது. துணை மேயர் ராஜப்பா மற்றும் 48 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக வந்த காங்கிரஸ் கட்சியின் 21 வது வார்டு கார்த்தி, 27 வது வார்டு பாரதி ஆகிய கவுன்சிலர்கள் ஆகியோர் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர். அப்போது தேசிய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோசமிட்டும், கண்டன பதாகைகள் ஏந்தியும் வந்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment