திண்டுக்கல் அடுத்த வடமதுரையில் மகாத்மா மைன்ட் கேர் செயல்பட்டு வருகிறது. இதன் புதிய கிளை திண்டுக்கல் ஆர் எஸ் ரோடு கனரா வங்கி மெயின் கிளை அருகே துவங்கப்பட்டது. இந்த புதிய கிளையை திமுக வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயின் ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார்.
இந்த புதிய கிளையில், மன நோய்கள், வீண் பயங்கள், வீண் சந்தேகம், மன பதட்டம், மன குழப்பம், மது அடிமை நோய்,போதை பழக்கங்கள், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், மூளை, நரம்பு நோய், தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, மன சோர்வு, ஆகிய நோய்களுக்கு மருந்து மாத்திரைகள், மனோதத்துவ ஆலோசனை, மன நல கல்வி , குடும்ப ஆலோசனை, யோகா, தியானப் பயிற்சியாகள் மூலம் சிகிச்சை மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகாத்மா மைன்ட் கேர் உரிமையாளர்கள் டாக்டர்கள் பாலகுரு, ஷர்மிளா பாலகுரு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment