திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா கே.சி. பட்டியில், மதன் குமார் (35) என்பவர் எஸ்.எஸ். மெடிக்கல்ஸ் அண்டு ஜெனரல்ஸ் நடத்தி வருகிறார். அந்தக் கடையில் அவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனர் பூமிநாதன் அங்கு திடீர் ஆய்வு நடத்தி அவரை விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் மருத்துவம் அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் போலி டாக்டராக செயல்பட்டு மருத்துவம் அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. போலி டாக்டர் மதன் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment