2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை முயற்சி... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 28 March 2023

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை முயற்சி...

 நிலக்கோட்டை அருகே

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, 

தாயும் தற்கொலை முயற்சிதிண்டுக்கல் அடுத்த நிலக்கோட்டை அருகே உள்ள செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூரைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சௌமியா (36). இவர்களுக்கு மிருதுளா ஸ்ரீ (8)என்ற மகளும், மித்ரன் (5)  என்ற மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது இதில் விரக்தி அடைந்த சௌமியா, தனது இரண்டு குழந்தைகளுக்கும் எறும்பு பவுடரை கலந்து கொடுத்து தானும் எறும்பு பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த மூவரையும் உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad