ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 28 March 2023

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா...

 



நத்தம் அருகே  ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா!



50 ஆடு, 150 மூடை  அரிசியில் சமையல் 



திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.


விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி நேற்று இரவு 1 மணிக்கு  பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.


இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad