திண்டுக்கல்லில் பயணத்தின் போது அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய போதை ஆசாமி
திண்டுக்கல் அடுத்த சாணார்பட்டி அருகே உள்ள கோணப்பட்டியில் இருந்து இன்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்ஸை டிரைவர் தனபால் ஓட்டி வந்தார். திண்டுக்கல் அடுத்த சிறுமலை பிரிவு பஸ் நிறுத்தத்தில், பஸ்ஸில் ஏறிய போதை ஆசாமி வின்சென்ட் (35) , கண்டக்டர் பாலையாவிடம் (50) தகராறில் ஈடுபட்டார். திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, போதை ஆசாமி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கண்டக்டர் பாலையாவை சரமாரி தாக்கினார். இதில் காதில் காயமடைந்தது. மூக்கு கண்ணாடி உடைந்தது. போதை ஆசாமியை பயணிகள் பிடித்து வைத்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பயணிகளுடன் பஸ்ஸை டிரைவர், ஓட்டி வந்து நிறுத்தினார்.
காயமடைந்த கண்டக்டர் பாலையாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில், போதை ஆசாமியை ஒப்படைத்து கண்டக்டர் பாலையா புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் பயணத்தின் போது கண்டக்டரை சரமாரி தாக்கிய போதை ஆசாமியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment