சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத் தொகை, சரண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே யூனியன் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ஞானத்தம்பி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் மாவட்ட முழுவதும் அரசு பணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அரசு ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment