பழநியில் நாளை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 3ல் திருக்கல்யாணம் ... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 27 March 2023

பழநியில் நாளை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 3ல் திருக்கல்யாணம் ...



பழநியில் நாளை பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 3ல் திருக்கல்யாணம் 



தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நாளை பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  பழநி திருஆவினன்குடி கோயிலில் நாளை  29-ம் தேதி கொடியேற்றம் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழாவின் ஆறாம் நாள் திருக்கல்யாணம் ஏப்ரல் .3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஏப்.7-ம் தேதி இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.



திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகனை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது குறிப்பிடத்தக்கது. பங்குனி மாதம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதே வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோயிலில் உற்சவர் சிலைக்கு பக்தர்கள் கொண்டு வரும் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad