திண்டுக்கல்லில் வக்கீல்கள்
2 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை சைதாப்பேட்டை வக்கீல் சங்க உறுப்பினர் ஜெய்கணேஷ் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த சில மாதங்களில் தூத்துக்குடி வக்கீல் முத்துக்குமார், அரியலூர் வக்கீல் சுவாமிநாதன், தர்மபுரி வக்கீல் சிவகுமார் என தொடர்ந்து வழக்கில் படுகொலை சம்பவம் நடந்தேறியுள்ளது.
தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுவதை திண்டுக்கல் வக்கீல் சங்கம் கண்டனம் தெரிவித்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் போன்று தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் வக்கீல் சங்கம் இன்றும், நாளையும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் வைக்கீல சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் குமரேசன் உள்ளிட்ட வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் தேக்கம் ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment