திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி ஆடுசந்தை இன்று நடைபெற்றது:
ஆத்தூர் செம்பட்டி ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் குஜிலியம்பாறை நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் ஆடு வாங்குவோர் வியாபாரிகள் வந்து சேர்ந்தனர் மேலும் இந்த சந்தைக்கு குறும்பை ஆடு, வெள்ளாடு, செம்பரி ஆடுகள் விற்பனைக்கு வந்தன 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டின் விலை ₹7500 முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது மேலும் தற்போது ஐயப்ப சீசன் என்பதால் வியாபாரம் சற்று மந்தமாகவே காணப்பட்டது!
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment