வடமதுரை அருகே அரசு சமுதாயக்கூடத்தில் வைத்திருந்த 700 கிலோ மக்காச்சோளம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆலம்பட்டி நால்ரோடு அரசு சமுதாயக்கூடத்தில் செங்குறிச்சி பாண்டியனுாரை சேர்ந்த இளையராஜா(35) தனது நிலத்தில் விளைந்த 19 மூடை மக்காச்சோளத்தை மழை காரணமாக வைத்திருந்தார்.
தீபாவளி பண்டிகை முடிந்ததும் விற்பனைக்காக கொண்டு செல்ல திட்டமிருந்த நிலையில், சமுதாய கூடத்தின் பூட்டை உடைத்த நபர்கள் உள்ளே இருந்த 700 கிலோ அளவிலான 11 மூடை மக்காச்சோளத்தை திருடி சென்றனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment