திண்டுக்கல் பகுதியில் ரயிலில் அடிபட்டு 11 மாதத்தில் 70 மயில்கள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
சென்னையிலிருந்து வரும் ரயில்கள் வடமதுரை, அய்யலுார் வழியாக திண்டுக்கல் வருகின்றன. கோவையிலிருந்து வரும் ரயில்கள் பழநி, அக்கரைப்பட்டி வழியாக திண்டுக்கல் வருகின்றன. இந்த 2 வழித்தடங்களிலும் காடுகள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். சரக்கு ரயில்களில் அரிசி,கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றி வரும் போது தண்டவாளங்களில் சிறிது சிதறும் இவற்றை உண்பதற்காக மயில்கள் தண்டவாளப்
பகுதிகளில் குவிகின்றன. ரயில் வரும் நேரத்தில் தள்ளிப்போக முடியாமல் அடிபட்டு இறக்கின்றன.
அவற்றை ரயில்வே போலீசார் வனத்துறையிடம் ஒப்படைக்கின்றனர்.
தேசியப் பறவையான மயில்கள் இறப்பது பொதுமக்களின் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தாண்டு 11 மாதங்களில் 70 மயில்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment