நிலக்கோட்டையில் இடிந்து விழுந்த நீதிமன்ற கூரை விசாரணைக்காக வந்தவர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்திற்கு, வத்தலகுண்டு அருகே கீழகோவில்பட்டியை சேர்ந்தவர் நடராஜன்(69) என்பவர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தார். இவர் வராண்டாவில் நின்றிருந்தபோது கூரை இடிந்து விழுந்தது. இதில் நடராஜன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment