ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை மார்க்கெட் விடுமுறை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.
தினசரி ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும்.
தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை மார்க்கெட் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment